ஒவ்வொரு நாளும்
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்.தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென். மத்தேயு 6:9-13
அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்வர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. லூக்கா 1:28
அர்ச்சிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென். லூக்கா 1:42
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக .வெளி 5:13
உங்கள் இருதயத்தை கடவுளுடைய மகா பரிசுத்தமுள்ள இரத்தத்தால் கழுவும்படியாக மன்றாடுங்கள்
உங்கள் இருதயத்தை INRI க்குள் வைத்து காத்திடும்படியாக மன்றாடுங்கள்`
உங்கள் இருதயத்தை மாதாவின் ஏழு வாள்கள் குத்தப்பட்ட மகா மாசற்ற திரு இருதயத்திலிருந்து வந்த மகா பரிசுத்தமுள்ள இரத்தத்தை இருதயத்தில் ஊற்றி கழுவி சுத்திகரிக்கும் படியாக மன்றாடுங்கள்
புதிய சுத்த இருதயத்தை என்னில் உருவாக்கியருளும் ஆண்டவரே என்று மன்றாடுங்கள்
ஆண்டவரே என் இருதயத்தில் உம்முடைய விளக்கை வைத்து உம்முடைய சத்தியத்தின் நெருப்பால் ஒளியேற்றி என் இருதயத்தை உம்முடைய ஒளியால் நிரப்பியருளும் ஆண்டவரே என்று மன்றாடுங்கள்
என் இருதயத்தை உம்மிடம் ஒப்புக் கொடுக்கின்றேன் ஆண்டவரே நீர் வந்து என் இருதயத்தில் தங்கும் ஆண்டவரே என்று மன்றாடுங்கள்
என் இருதயத்திலே உம்முடைய பரிசுத்த கட்டளைகளை எழுதியருளும் ஆண்டவரே என்று மன்றாடுங்கள்
மாதாமா என்னுடைய இருதயத்தில் வந்து தங்குங்கம்மா என் இருதயத்தை தீமையாகிய பாவத்திற்கு விலக்கி காத்திடுங்கம்மா
மாதாமா இயேசப்பா நீங்க இரண்டு பேரும் என் இதயத்தில் வந்து தங்குங்கள். இருள்களால் நிறைந்த என் இருதயத்தை உங்களுடைய ஒளியால் நிரப்புங்கம்மா நிரப்புங்கப்பா என்று மன்றாடுங்கள்
