About Us

  1. நான் மெய்யான திராட்சச் செடி, என் பிதா அதைப் பயிரிடுகிறவர்.
  2. என்னிடத்தில் கனி கொடாத சகல கிளைகளையும் அவர் தறித்துப் போடுவார். மேலும் கனிகொடுக்கிற யாவும் அதிகக் கனி கொடுக்கும் பொருட்டு அவைகளைக் கழிப்பார். (மத். 7:19.)
  3. நான் உங்களுக்குச் சொன்ன வாக்கியத்தின் நிமித்தம் நீங்கள் இப்போதே சுத்தமாயிருக்கிறீர்கள். (அரு. 13:10.)
  • 3. நான் உங்களுக்குச் சொன்ன வாக்கியத்தினிமித்தம் நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள் என்பதற்கு, நான் உங்களுக்குச் சொன்ன திராட்ச செடியின் உவமைப்படி நீங்கள் என்னோடு ஒன்றித்திருப்பதினாலும், என்னுடைய வார்த்தைகளை விசுவசித்து நம்பியிருப்பதினாலும், நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள் என்றர்த்தமாம்.
  1. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன். கொடி யானது திராட்சச்செடியில் நிலைத்திரா விட்டால், தானாகக் கனி கொடாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திரா விட்டால் கனி தரமாட்டீர்கள்.
  2. நான் திராட்சச் செடி, நீங்கள் கொடிகள்; ஒருவன் என்னிலும், நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுதியான கனியைத் தருவான். ஏனெ னில் நான் இல்லாமல் உங்களாலே ஒன்றுஞ் செய்யமுடியாது. (2 கொரி. 3:5.)