யோவான் 8:32. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
யோவான் 19: 26-27. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.
தேவதூதன் அவளிருந்த இடத்தில் பிரவேசித்து: பிரியதத்தத்தினாலே பூரணமானவளே வாழ்க! கர்த்தர் உம் முடனே; ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக் கப்பட்டவள் நீரே என்றார்.
லூக்கா 1:38. அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்.

COMMANDMENTS
மத்தேயு 22: 37. இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;